#BREAKING : அரசு பஸ் கோர விபத்து - 5 பேர் உயிரிழப்பு..!
Mar 20, 2026, 12:15 IST
சேலம் அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு என முதற்கட்ட தகவல்.அரியானூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தடுப்பை தாண்டி வந்து சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியதில் 5 பேர் பலி.
சேலம், அரியானூர் அருகே அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து பைக், மினி ஆட்டோ மீது அதிவேகமாக மோதியது. இதில், 5 பேர் உடல் நசுங்கி பலியானதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர் திசையில் தாறுமாறாக சென்று வாகனங்கள் மீது மோதிது. பஸ்ஸில் இருந்த பயணிகளில் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.