×

#BREAKING : சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து - 3 பேர் உயிரிழப்பு..!

 

சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் உரிமம் பெற்று சிறிய மற்றும் பெரிய அளவில் 1000-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதத்துக்கும் மேல் சிவகாசி பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் 70 சதவீத பட்டாசுகள் பெரிய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு உரிமம் ரத்து செய்யப்பட்ட 80-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உற்பத்தி அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகளில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டது.பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக கூறி, தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.


பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும், ஆய்வை கண்டித்தும் சிறு பட்டாசு ஆலை உரிமையாளர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிவகாசி தொகுதி எம்எல்ஏவான தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தொடர் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்கவே ஆய்வுகள் நடைபெறுகின்றன. உங்கள் பாதுகாப்பே முக்கியம், யாரும் கவலைப்பட வேண்டாம்.

சிவகாசியின் உயிர் நாடியான பட்டாசு தொழிலும், மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில், நாங்கள் உறுதியாக உள்ளோம், எனப் பதிவிட்டு இருந்தார்

இந்நிலையில் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது.கிருஷ்ணா என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி ஒருவர் படுகாயம் -

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 

#JUSTNOW || சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து - 3 பேர் உயிரிழப்பு #Sivakasi | #Crackersfactory | #Death | #PolimerNews pic.twitter.com/2wm9Vpe37g

— Polimer News (@polimernews) August 13, 2026


 

#JUSTNOW || சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து - 3 பேர் உயிரிழப்பு #Sivakasi | #Crackersfactory | #Death | #PolimerNews pic.twitter.com/2wm9Vpe37g

— Polimer News (@polimernews) August 13, 2026