×

#BREAKING ஆகஸ்ட் 25ல் தவெகவின் 2வது மாநில மாநாடு! - விஜய் அறிவிப்பு..!

 


தவெகவின் 2வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.  

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.

தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.