×

#BREAKING : 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது..!!

 
2025 - 26ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றன.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 25,801 பேர், சிறைவாசிகள் 395 பேர் என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் 4,219 தேர்வு மையங்களில் தேர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த தேர்வு பணிகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 47,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4,950-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவர்களில் தமிழ் பொதுத் தேர்வை 10,877 மாணவர்கள் மற்றும் 1,021 தனித்தேர்வர்கள் எழுதவில்லை. ஆங்கிலம் பொதுத் தேர்வை 10,369 மாணவர்களும், 1,042 தனித்தேர்வர்களும் எழுதவில்லை. கணிதம் பொதுத் தேர்வை 11,284 மாணவர்களும் 1,524 தனித்தேர்வர்களும் எழுதவில்லை. அறிவியல் தேர்வுக்கு 11,341 மாணவர்களும் 1,240 தனித்தேர்வர்களும் வரவில்லை. சமூக அறிவியல் தேர்வை 11,228 மாணவர்களும் 1,231 தனித்தேர்வர்களும் எழுதவில்லை. ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற விருப்பமாெழி பாடத்தேர்வை எழுத 118 பேர் வரவில்லை.
மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டன. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 20-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
Whatsapp செயலி வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ்ஆப் செயலியில் 78452-52525 என்ற எண்ணை தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் Hi எனப் பதிவிட்டு, பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர் (Directorate of Government Examinations) மற்றும் தேர்வர்களின் வகுப்பை தேர்வு செய்ய வேண்டும்.
தொடர் வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து அனுப்பினால், தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே Whatsapp செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வாட்ஸ்ஆப் செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,21,105 பேர் தேர்ச்சி 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி
ஆண்கள் - 92.15%
பெண்கள் - 96.47%
5,171 பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
1,931 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

புதுக்கோட்டை 97.57% 
சிவகங்கை 97.54% 
தஞ்சாவூர் 97.41%
திருச்சி 97.31%
கன்னியாகுமாரி 97.30%

97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை 97.54%, தஞ்சாவூர் - 97.41%, திருச்சி -97.31%, கன்னியாகுமரி 97.30% உடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.