#BREAKING : 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
Updated: Apr 3, 2026, 14:01 IST
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த திங்கள்கிழமையே வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த
நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன், கோவை வடக்கு வானதி சீனிவாசன், தஞ்சையில் கருப்பு முருகானந்தம், அவிநாசியில் எல். முருகன், நாகர்கோவிலில் எம். காந்தி, விளவங்கோட்டில் விஜயதரணி, சாத்தூரில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.