×

#BREAKING : வால்பாறையில் வேன் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு..!!

 

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்.வால்பாறை மலைச்சாலையில் 13ஆவது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்ததாக தகவல்...

வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி திரும்பிய சுற்றுலா பயணிகளின் வேன், 13-வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 10 பேர் உயிரிழந்ததாகத் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.