×

#BREAKING காலை உணவு திட்டம் பெயர் மாற்றம்! விஜய் அதிரடி

 

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் பெயர், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்திற்கு முதல்வரின் காலை உணவுத்திட்டம் என பெயரிடப்பட்டிருந்தது. இந்த பெயரை மாற்றி தவெக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காலை உணவு திட்டத்தை 6 முதல் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு ரூ.12.71 செலவு என்ற வகையில் 12.87 லட்சம் மாணவர்கள் பயனடைவர். திட்ட செலவுக்கான உத்தேச மதிப்பு ரூ.343.55 கோடி, நடப்பாண்டு திட்ட செலவுக்காக ரூ.217.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி, “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பொறுப்பேற்று பொற்கால ஆட்சி நடத்திய போது கல்வியில் புரட்சி செய்தார். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயர் சூட்டி முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்பதோடு, பெருந்தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு  நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.