திருமணம் செய்ய மறுத்த காதலியின் தலையில் கல்லால் தாக்கிய காதலன்
திருமணம் செய்ய மறுத்த காதலியை தலையில் கல்லால் கொடூரத் தாக்குதல் நடத்திய காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண், திருச்சியில் தங்கி எம்பிஏ படித்துக் கொண்டே பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார். இவரும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் சாலை நடைமேடையில் இருவரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அந்த இளைஞர் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அந்த இளைஞன் திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து தன் காதலியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் மயங்கி விழுந்த நிலையிலும், தொடர்ந்து அவரைத் தாக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியே சென்ற பொதுமக்கள், உடனடியாக பாய்ந்து சென்று அந்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர்.