காதலியுடன் தனிமையில் இருந்ததை பார்த்ததால் பீர் ஊற்றி சிறுவன் கொலை!
ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பகீர் திருப்பமாக மாதேவன் தன் காதலியான கல்லூரி மாணவி ரதியுடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்து விட்டதால் சிறுவனை காரில் கடத்தி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ்–மஞ்சு தம்பதியினரின் 13வயது மகன் ரோகித், 02.07.2025 அன்று காணாமல் போன நிலையில், 03.07.2025 என்று அஞ்செட்டியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் ரோகித் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். அச்சிறுவனை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது சிசிடிவி காட்சிகள் மூலமாக தெரியவந்தது. ரோகித்தின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அளித்த புகாரின்படி, அஞ்சட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சிறுவன் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பகீர் திருப்பமாக மாதேவன் என்பவர், தனது காதலியான கல்லூரி மாணவி ரதியுடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்து விட்டதால் சிறுவனை காரில் கடத்தி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.ஏற்கனவே மாவனட்டி கிராமத்தை சேர்ந்த மாதேவன் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த மாதேவா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கல்லூரி மாணவி ரதி கைது செய்யப்பட்டுள்ளார்.