×

மிளகாய் பொடி தூவி கடத்தப்பட்ட  சிறுவன்- 2 மணிநேரத்தில் மீட்ட போலீசார்

 

குடியாத்தத்தில் பட்டப் பகலில் வீட்டு வாசலில் குழந்தை காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் பவள தெருவில் சாப்ட்வேர் இன்ஜினியர் தொழில் செய்யும் வேணு என்பவர் தனது நான்கு வயது மகனை  உணவு இடைவேளைக்காக பள்ளியில் இருந்து அழைத்து வந்து வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தார். அந்த நேரத்தில், மர்ம நபர்கள் மிளகாய் பொடி கண்ணில் தூவியும் மிளகாய் பொடியை வாரி முகத்தில் அடித்தும் தனது குழந்தையை கண் எதிரே காரில் கடத்தியுள்ளனர்.

கர்நாடக மாநில பதிவென் கொண்ட வெள்ளை நிற சொகுசு காரின் கடத்தியதை  கண்ட தந்தை வேணு பதறி கூச்சலிட்ட நிலையில். மின்னல் வேகத்தில் கார் சென்றுள்ளது. இதனால் மிகுந்த பதட்டத்துடன் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். விரைவாக செயல்பட்ட குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர்  அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து உஷார்படுத்தியதன் அடிப்படையில் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டு  நான்கு திசையிலும் காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு கார் சென்ற இடங்களை ஆய்வு செய்து சுமார் 2 மணி நேரத்தில் சிறுவனை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.