பாதாள சாக்கடையில் விழுந்த சிறுவன்! சென்னையில் அதிர்ச்சி
சென்னை அமைந்தகரையில் திறந்த வெளியில் இருந்த கழிவு நீர் தொட்டியில் திடீரென விழுந்த சிறுவனுக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது.
சென்னை அமைந்தகரையில் உள்ள வெள்ளாளர் தெரு அருகே ராஜன் என்பவர் வசிக்கிறார். 7 வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவனான இவரது தந்தை ஓட்டுநர், தாயார் வீட்டு வேலை செய்யும் பணியில் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அந்த பகுதியில் தனது நண்பர்களுடன் ராஜன் விளையாட சென்றுள்ளார். அப்போது வெள்ளாள தெருவில் புதிதாக அமைக்கும் கழிவு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன் மூடி திறந்த வெளியில் இருந்துள்ளது,
அப்போது அதனை பார்க்காமல் சென்ற ராஜன் திடீரென உள்ளே விழுந்தார். உடனடியாக அவரது நண்பர்கள் கூச்சல் இட்டனர். உடனே அருகில் இருந்த பொது மக்கள் உடனடியாக ஏணி மூலமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக ராஜனுக்கு இடது காலில் வீக்கத்துடன் காயம் ஏற்பட்டுள்ளது.