×

காருக்குள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மூச்சு திணறி பலி

 

மேட்டுப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடியபோது, கதவுகளைத் திறக்க முடியாமல் மூச்சு திணறி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடியபோது, கதவுகளைத் திறக்க முடியாமல் மூச்சு திணறி முகுந்த் (9) என்ற சிறுவன் உயிரிழந்தார். சிறுமுகையை சேர்ந்தவர் வேலுமணி. இவரது மகன் முகுந்த் (9). இவர்களது வீட்டின் முன் பள்ளி ஆசிரியர் மணிவண்ணன் என்பவரது கார் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது வழக்கம். அந்தவகையில், நேற்றும் காரை நிறுத்திவைத்துவிட்டு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முகுந்த் கார் சாவியை எடுத்துகொண்டு காரினுள் சென்று விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது காரின் கதவுகள் தானாக மூடிக்கொண்டது. இதனால் முகுந்த் வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார். இதனால் காருக்குள்ளே மூச்சுத்திணறி மயக்கம் அடைந்துள்ளார். நேற்று மாலை ஆசிரியர் தனது காரை எடுக்க வந்தபோது சிறுவன் மயங்கிகிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் உதவியுடன் சிறுமுகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். காரின் கதவு திறந்தே இருந்ததா? சிறுவன் காரின் உள்ளே எப்படி சென்றார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.