×

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

 

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள், சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியானவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு கோவின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் . முன் பதிவு செய்யாமலும் நேரடியாக தடுப்பூசி மையத்திற்கு சென்று மூன்றாவது டோஸை  செலுத்திக் கொள்ளலாம்.  ஏற்கனவே பயன்படுத்திய அடையாள அட்டை அல்லது கொரோனா  தடுப்பூசி சான்றிதழைக் கொண்டு செல்வது அவசியம்.  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணை நோயாளிகளுக்கான சான்றிதலை  சமர்ப்பிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்கள் சுயமாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள மட்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் இரண்டு டோஸ் எந்தத் தடுப்பூசி போடப்பட்டதோ , தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும்  அதே நிறுவன டோஸ் 
 தான் செலுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் சென்னை எம்ஆர்சி நகரில் முன் களப்பணியாளர்கள் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் இருக்க கூடியவர்களுக்கு  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.   2021 ஏப்ரல் 14 முன் 2 டோஸ் தடுப்பூசி  செலுத்திய முன் களப்பணியாளர்கள்,  60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் 35. 46 லட்சம் பேர் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்கள்.  இதில் 9.78 லட்சம் பேர் முன் களப்பணியாளர்கள்,  5.75 லட்சம் பேர் சுகாதாரப் பணியாளர்கள் , 20.3 லட்சம் பேர் இணை நோயாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.