நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்களை அபகறிக்க முயற்சி- நீதிமன்றத்தை நாடிய குடும்பம்
நடிகை ஸ்ரீதேவியின் சென்னை சொத்து விவகாரம் தொடர்பாக போனி கபூர், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர்களாக இருக்கக்கூடிய அவருடைய மகள்கள் ஜான்ஹவி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகிய மூன்று பேரும் இணைந்து சென்னை_உயர்நீதிமன்றத்தில் ஒரு மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில் , கபூரின் மனைவியும் பிரபல முன்னாள் நடிகையுமான ஸ்ரீதேவி அவர்கள் 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) 4.77 ஏகர் நிலம் வாங்கியதாகவும், ஆனால் இந்த நிலத்தை சொந்தம் கொண்டாடிக்கொண்டு ஒரு பெண்மணியும் அவருடைய இரண்டு குழந்தைகளும் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை 2025-ம் ஆண்டு தொடுத்துள்ளதாகவும், இந்த வழக்கை நிராகரிக்க கபூர் குடும்பம் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிமன்றம் டிசம்பர் 1, 2025-ம் நாள் தள்ளுபடி செய்துவிட்டதால் தற்போது உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.