×

#BREAKING இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் வந்ததை அடுத்து, இளையராஜாவின் அலுவலகத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். அண்மையில், சீமான், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஈபிஎஸ், விஜய் உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.