×

4 தமிழக மீனவர்களின் உடல்கள்: இலங்கையில் பிரேத பரிசோதனை!

கச்சத்தீவு பகுதியில் உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கச்சத்தீவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், விசைப்படகில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது , இலங்கை கடற்படையினர் தங்களது கப்பலை வைத்து இடித்ததாகத் தெரிகிறது. இதில் மீனவர்களின் விசைப்படகு சேதமடைந்த நிலையில், கடல் நீர் உள்ளே புகுந்ததால் மீனவர்கள் 4 பேரும் மாயமாகினர். தகவல் அறிந்த தமிழக மீன்வளத்துறை 3 விசைப்படகுகளில் சென்று மீனவர்களை தேடியதையடுத்து, 4 மீனவர்களும்
 

கச்சத்தீவு பகுதியில் உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

கச்சத்தீவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், விசைப்படகில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது , இலங்கை கடற்படையினர் தங்களது கப்பலை வைத்து இடித்ததாகத் தெரிகிறது. இதில் மீனவர்களின் விசைப்படகு சேதமடைந்த நிலையில், கடல் நீர் உள்ளே புகுந்ததால் மீனவர்கள் 4 பேரும் மாயமாகினர். தகவல் அறிந்த தமிழக மீன்வளத்துறை 3 விசைப்படகுகளில் சென்று மீனவர்களை தேடியதையடுத்து, 4 மீனவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இச்சம்பவத்தை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

4 மீனவர்கள் உயிரிழக்கும் அளவிற்கு, இலங்கை கடற்படையின் தாக்குதல் எல்லை மீறிக் கொண்டிருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட பலர் கண்டனக் குரல்களை எழுப்பினர். இலங்கை தூதரை அழைத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தனது எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்தது. இந்த நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

4 மீனவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்ய இந்திய துணை தூதரக அதிகாரிகளுக்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி அளித்ததன் பேரில், பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. அவை முடிந்த பின் இரவு 8 மணிக்கு உடல் ஒப்படைக்கப்படவிருக்கும் நிலையில், நாளை காலை இந்திய கடலோர காவல்படையிடம் மீனவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. மீனவர்களின் உடல்கள் இந்தியாவிலேயே உடற்கூறு ஆய்வு செய்யப்படும் என இலங்கை அமைச்சர் கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.