×

ஜனநாயகன் படத்தை பார்த்து அழுத அமைச்சரை கலாய்த்து ட்வீட் போட்ட ப்ளூ சட்டை மாறன்..!

 

புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஜனநாயகன் திரைப்படத்தை அமைச்சர் பர்வேஸ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பார்த்தார். ஜனநாயகன் படம் தொடங்கி விஜய் அறிமுகக் காட்சி வரும் போதே அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விடத் தொடங்கிவிட்டார். ஒரு கட்டத்தில் ஆனந்த் கண்ணீரையே கட்டுப்படுத்த முடியவில்லை.இதனால் அருகில் இருந்த அவரின் உதவியாளர் கூட அதிர்ச்சி அடைந்தார். விஜய்யின் கடைசி படம் என்பதால், அதனை பார்த்த போது தேம்பி தேம்பி அழுததாக தெரிகிறது.

இந்த வீடியோ வெளியானதும் ரசிகர்கள் விஜய்யின் கடைசி படம் என்பதால் அமைச்சர் உணர்ச்சிவசப்பட்டார் என்று அதை சோசியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர்.இந்த சூழலில் தான் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அமைச்சர் அழுத சில புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், "இதையெல்லாம் பாத்து நாங்கதான் அழுவனும்." என்று கிண்டலாக பதிவு செய்திருக்கிறார்.

இதையெல்லாம் பாத்து நாங்கதான் அழுவனும். pic.twitter.com/UC3zvSONwv

— Blue Sattai Maran (@tamiltalkies) July 23, 2026


இன்னொரு பதிவில், "எல்லா பக்கமும் கேமரா. போதாததுக்கு ஃப்ளாஷ் லைட் வேற.

தவெக அமைச்சர் ஃபர்வேஸ்...ஜனநாயகன் பார்த்து அழுகிறார்.என ட்வீட் செய்து உள்ளார்.

இந்தப் பதிவு சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பதிவுக்கு விஜயின் ரசிகர்கள் ஒருவரின் உணர்ச்சியை கூட கிண்டல் செய்ய வேண்டுமா? ஒரு ரசிகர் அல்லது ஆதரவாளர் விஜயின் கடைசி படம் என்ற பீலிங்கில் அழுகிறார் அதை இவர் இப்படி பேசுகிறாரே என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.