துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு கேர் பவுண்டேஷன் சார்பாக இரத்த தான முகாம் சிதம்பரம், அண்ணாமலை நகர், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையில் (முன்னதாக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி & மருத்துவமனை - RMMCH) நடைபெற்றது.
இம்முகாமில் கேர் பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இம்முகாமில் பல சமூக சேவகர்கள், தன்னார்வலர்கள் தன்னார்வத்துடன் ரத்த தானம் அளித்தனர். இந்த இரத்த தான முகாமானது மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் திருப்பதி ஒப்புதலிலும், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஜூனியர் சுந்தரேஷ், இரத்த வங்கி அதிகாரி மருத்துவர் வள்ளுவன் மற்றும் குடிமை மருத்துவ அதிகாரி (RMO) மருத்துவர் பாரி அனுமதியுடன் மற்றும் இரத்த வங்கி மேற்பார்வையாளர் செந்தில்குமாரின் வழிகாட்டலிலும் இரத்த வங்கி செவிலியர்கள், இரத்த வங்கி ஆய்வு கூட நுட்புனர்கள், இரத்த வங்கி உதவியாளர்கள் உதவியோடு இந்த முகாம் இனிதே நடைபெற்றது.
மேலும், இரத்த தானம் முகாமில் கலந்து கொண்டு ஆர்வமுடன் ரத்தம் தானம் செய்தவர்களுக்கு பழசாறுகள் வழங்கப்பட்டது. அதே சமயம், ரத்த தானம் செய்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை கேர் பவுண்டேஷன் நிறுவனர் முனைவர் கோபிநாத் சாரங்கபாணி மற்றும் தலைவர் பால.பத்மநாபன், சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் முனைவர் பா. சுடரொளி, கடலூர் மாவட்ட திமுக மாணவரணி தணை அமைப்பாளர் செல்வி. திவ்யா சாமியப்பன் மற்றும் திருமுட்டம் திமுக ஒன்றிய பொருப்பாளர் பொறியாளர் சா கெளதமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர் மேலும் ரத்த தானம் அளித்தார். இந்த நிகழ்வில் அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் எழிலரசன், தொழிலதிபர் சரவணன், பொறியாளர் அகிலன், முனைவர் கலைமணி கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.