×

மோடியை முன்னிறுத்தாவிட்டால் பாஜகவுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது: நிஷிகாந்த் துபே!

 

ஜார்க்கண்ட் மாநிலம் கொட்டா மக்களவை தொகுதி பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 2014 முதல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி வகிக்கிறார். இதற்கு முன்பு பாஜகவுக்கு வாக்களிக்காத பல்வேறு பிரிவினர் குறிப்பாக ஏழை மக்கள் இப்போது எங்கள் கட்சிக்கு வாக்களிக்கின்றனர். பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. மோடி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதே இதற்கு காரணம்.

அடுத்த 15 முதல் 20 ஆண்​டு​களுக்கு மோடி​தான் தலை​வர். 2029-ம் ஆண்டு நடை​பெறவுள்ள மக்​கள​வைத் தேர்​தலை பிரதமர் மோடி தலை​மை​யில் எதிர்​கொள்ள வேண்​டிய கட்​டா​யத்​தில் பாஜக உள்​ளது. மோடியை முன்​னிறுத்​தா​விட்​டால் மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக​வால் 150 இடங்​களில்​கூட வெற்றி பெற முடி​யாது.

மோடி​யின் பெயர் மட்​டுமே கட்​சிக்கு வாக்​கு​களைப் பெற உதவும். இது அவருடைய தலை​மைத்​து​வத்​துக்​கும் மக்​கள் அவர் மீது வைத்​திருக்​கும் நம்​பிக்​கைக்​கும் சான்​றாகும். அவரது உடல் அனு​ம​திக்​கும் வரை, 2047-க்​குள் வளர்ந்த இந்​தியா என்ற நமது இலக்கை அடைய அவரது தலைமை தேவை. இவ்​வாறு அவர்​ கூறியுள்ளார்.