×

தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு யாருக்கும் பாஜக ஆதரவு வழங்கப் போவதில்லை - நயினார் நாகேந்திரன்..!

 

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

மக்களின் தீர்ப்பை தமிழக பாஜக மதிப்பதாக தெரிவித்தார்.

ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறினார் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிப்பது கட்சிகளின் பொறுப்பு என்றும், தேவைப்பட்டால் விஜய் நீதிமன்றத்தை நாடி பிரச்னையை சட்டப்படி சந்திக்கலாம் என்றும் நயினார் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு யாருக்கும் பாஜக ஆதரவு வழங்கப் போவதில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.