×

சரியான போட்டி... பாஜக vs காங்கிரஸ் நேரடியாக மோதும் தொகுதிகள்!

 

திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் Vs பாஜக மோதும் தொகுதிகள்

இந்நிலையில் ஊட்டியில் காங்கிரஸ், பாஜக நேரடியாக போட்டியிடுகின்றன. 2021 தேர்தலில் வெறும் 5000 வாக்குகளில் பாஜக வாய்ப்பை இழந்தது குறிப்பிடதக்கது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அறந்தாங்கி தொகுதி, காங்கிரசிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற நான்கு தொகுதிகளில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதுகிறது. அதேபோல் குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய டதொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேருக்கு நேர் பாஜக வேட்பாளர்களுடன் மோதவுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக vs கம்யூனிஸ்ட்டுகள்


தளி மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய 2 தொகுதிகளில் பாஜக vs கம்யூனிஸ்ட்டுகள் இடையே போட்டி நிலவுகிறது. 

பாஜக vs மதிமுக

மொடக்குறிச்சி மற்றும் மதுரை தெற்கில் பாஜக vs மதிமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது.