மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டு வாக்கு சேகரிக்கும் வானதி!
முதல்வர் ஸ்டாலின் மக்களை திசை திருப்ப பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக பாஜக நிர்வாகியும் கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ வெளியிட்டுவருகிறார். அந்த வீடியோவில், “பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்கள் தலை நிமிர்ந்து உள்ளே செல்லும் நிலை உருவாகும். நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்தாலும் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் எந்த விதத்திலும் குறையாது. முதல்வர் ஸ்டாலின் மக்களை திசை திருப்ப பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். தங்களுடைய சுய நலத்திற்காக நாட்டு மக்களை திசை திருப்புவது சரியான அரசியல் கிடையாது.
சிந்திப்பீர்..! NDA கூட்டணிக்கு வாக்களிப்பீர்..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.