☰
×

மீண்டும் மீண்டுமா? கைதிகள் தப்பிக்கும் தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி எப்போது?- வானதி சீனிவாசன்

 

மீண்டும் மீண்டுமா? கைதிகள் தப்பிக்கும் தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி எப்போது? பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், "மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜா என்ற கைதி தீர்ப்பு நாளில் காவலர்களின் கண்காணிப்பை மீறி தப்பி ஓடியதாகக் கூறப்படும் செய்தி சிறைத்துறையின் அலட்சியத்தினை மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் அரங்கேறுவது, தவெக ஆட்சியில் காவல்துறை மற்றும் சிறைத்துறையின் நிர்வாகச் சீர்கேட்டையே அம்பலப்படுத்துகிறது.

குற்றம் நிரூபிக்கப்படாத அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் லாக்கப் மரணம் கொண்டு செல்லும் காவல்துறையும், சிறைத்துறையும் குற்றவாளிகளை தப்ப விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பொதுமக்களுக்கு காவல்துறையின் மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்திருக்கிறது. ஒவ்வொரு திட்டத்திற்கும் 'வெற்றி' எனப் பெயர் சூட்டும் தவெக அரசு, கைதிகள் தப்பியோடும் இந்தத் தொடர் சம்பவங்களுக்கும் 'வெற்றி ஓட்டம்' என்று பெயர் சூட்டிக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.