×

“கொள்கை கூட்டணி சிதறி போய் கிடக்கிறது”- திமுகவை விமர்சித்த வானதி சீனிவாசன்

 

டெல்லி பிரதிநிதி அதிகாரியை நியமிப்பது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பம், நியமித்த நபரை பற்றி சர்ச்சைகள் எழும்போது பதிலளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை என பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன்  கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “டெல்லி பிரதிநிதி அதிகாரியை நியமிப்பது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பம், நியமித்த நபரை பற்றி சர்ச்சைகள் எழும்போது பதிலளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை. சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டது பற்றி முதல்வர் பதில் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டின் பிரச்சனைகள் பற்றி வெங்கட நாராயணாவுக்கு தெரியுமா? அனுபவம் வாய்ந்தவரை நியமிக்கவில்லை என்றால் மக்கள் கேள்வி கேட்கதான் செய்வார்கள்.மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு சேர்ப்பது குதிரை பேரம் இல்லாமல் வேறென்ன? 40 நாள் ஆட்சியில் குதிரை பேரத்தில்தால் தவெக அரசு வேகமாக செயல்பட்டுள்ளது. வரும் காலம் பாஜகவிற்கு தான் இருக்கப்போகிறது. அதில் எந்த மாற்றமும்  இல்லை. குறைவான அனுபவம் இருந்தாலும் குதிரை பேரத்தில் வேகமா செயல்படுகிறார்கள். கொள்கை கூட்டணி சிதறி போய் கிடக்கிறது” என விமர்சித்தார்.