“பெண்களை இளக்காரமாக நினைக்கும் திமுக அமைச்சர்கள் இந்நேரம் உணர்ந்து இருப்பார்கள்”- வானதி சீனிவாசன்
Apr 28, 2025, 19:22 IST
இனியாவது பெண்களைக் குறித்து அவதூறாக பேசுவதை திமுக அமைச்சர்களும் உடன்பிறப்புகளும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “பாஜக மகளிரணி உட்பட தமிழக மகளிர் அனைவரும் ஒன்றுபட்டு கண்டித்து எதிர்குரல் கொடுத்ததன் விளைவாகவே திரு. பொன்முடி அவர்கள் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தமிழக மகளிருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, மகளிர் உரிமையின் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமும் ஆகும்.