பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் பின்னடைவு
May 4, 2026, 09:55 IST
தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 27 இடங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளன.
தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 27 இடங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளன. கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் பின்னடைவை சந்தித்துள்ளார். காலை 9:30 மணி நிலவரப் படி மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் பின்னடைவை சந்தித்துள்ளார். காலை 9:20 மணி நிலவரப் படி சாத்தூர் நயினார் நாகேந்திரன் பின்னடைவை சந்தித்துள்ளார். சாத்தூர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மூன்றாம் இடத்திலேயே பாஜக உள்ளது.