இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு: நயினார் நாகேந்திரன்..!
Sep 10, 2026, 14:12 IST
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜக முழு ஆதரவு அளித்து அவர்களின் வெற்றிக்கு பணியாற்றும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் இன்று (செப்.10) பேட்டியளித்த அவர், இந்த இடைத்தேர்தல்கள் எந்த காரணத்திற்காக வந்துள்ளன என்பதை பொதுமக்கள் சிந்தித்து பார்த்து கேள்வி கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.