முதல்வரை சைனீஸ் மொழியில் வாழ்த்திய பாஜக
Mar 1, 2024, 11:52 IST
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளையொட்டி, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
穆图维尔
卡鲁纳尼蒂
斯大林生日快乐
我们祝您健康长寿
(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்டாலின்! நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக்கள்!)
என்று குறிப்பிட்டுள்ளது.