☰
×

"எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா?" - தமிழிசை சௌந்தரராஜன்

 

கலெக்டர் பத்மஜாவிற்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கலெக்டர் பத்மஜாவிற்கு @TVKVijayHQ எம்எல்ஏ அருள் விக்னேஷ் இ டமிருந்து குறுஞ்செய்தி வந்ததாக மாவட்ட ஆட்சியர் எந்த புகார் அளிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தl தெரிவித்துள்ளது... இந்த அறிவிப்புக்கு ஏன் இவ்வளவு தாமதம்... செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த தகவல் பரவிக் கொண்டிருக்கிறது…

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) November 23, 2026


இதுதொடர்பாக தமிழிசை தனது எக்ஸ் தளத்தில், "கலெக்டர் பத்மஜாவிற்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் இடமிருந்து குறுஞ்செய்தி வந்ததாக மாவட்ட ஆட்சியர் எந்த புகார் அளிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது... இந்த அறிவிப்புக்கு ஏன் இவ்வளவு தாமதம்... செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த தகவல் பரவிக் கொண்டிருக்கிறது கண்டனத்திற்குரியதாகிக் கொண்டிருக்கிறது.. இன்னும் சொல்லப்போனால் தேசிய மகளிர் ஆணையத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்... தாமதப்பட்ட நீதியே மறுக்கப்பட்ட நீதியாக இருக்கும்பொழுது.. தாமதப்பட்ட இந்த விளக்கத்தை தமிழ்நாட்டு மக்கள் எப்படி எடுத்துக் கொள்வது?.. அது மட்டுமல்ல ஆட்சியர் புகார் அளிக்கவில்லை என்று தான் சொல்கிறார்களே தவிர சட்டமன்ற உறுப்பினர் அனுப்பினாரா இல்லையா என்பதில் விளக்கம் இல்லை?" எனக் குறிப்பிட்டுள்ளார்.