“தண்ணீர் பாட்டில்... சட்டமன்றத்திலும் இதைப் பின்பற்றலாம்”- தமிழிசை அட்வைஸ்
இன்று சட்டமன்றத்தில் தண்ணீர் கொடுப்பதை பற்றிய ஒரு கோரிக்கையை சகோதரி பிரேமலதா வைக்கவும் அதற்கு பதிலான சில விவாதங்கள் நடந்ததையும் தொலைக்காட்சியில் பார்த்தேன் என பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழிசை செளந்தர்ராஜன் தனது எக்ஸ் தளத்தில், “இன்று சட்டமன்றத்தில் தண்ணீர் கொடுப்பதை பற்றிய ஒரு கோரிக்கையை சகோதரி பிரேமலதா வைக்கவும் அதற்கு பதிலான சில விவாதங்கள் நடந்ததையும் தொலைக்காட்சியில் பார்த்தேன்... நெகிழி பாட்டிலில் தண்ணீர் வைக்க வேண்டாம் என்பதற்காக சட்டமன்றத்தில் அப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது என்று நினைக்கிறேன்.. நான் தெலுங்கானா ஆளுநர் ஆனவுடன் தெலுங்கானா ராஜ்பவன் முற்றிலும் நெகிழி இல்லாத ராஜ்பவனாக. Plastic free rajbalahan ஆக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே மாற்றினேன்.... அப்பொழுது கண்ணாடி குப்பிகளை வாங்கி ,வரும் விருந்தினர்களுக்கெல்லாம் அதை கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினோம்... அந்தக் கண்ணாடி குப்பிகளின் மாதிரி படத்தை இங்கே பதிவிடுகிறேன்... சட்டமன்றத்திலும் இதைப் பின்பற்றலாம்.... சிறிய குப்பிகள் தான் அதனால் வீசினாலும் காயப்படாமல் இருக்கின்ற அளவிலேயே இவை இருக்கின்றன...” எனக் குறிப்பிட்டுள்ளார்.