☰
×

ஜூலை மாதமே தவறான SMS பற்றி தெரிந்தும் அரசு எம்.எல். ஏவை பாதுகாத்தது ஏன்?-தமிழசை 

 

ஜூலை மாதமே இந்த தவறான எஸ்எம்எஸ் பற்றி தகவல் தெரிந்தும் அரசாங்கம் ஏன் சட்டமன்ற உறுப்பினரை பாதுகாக்க முயற்சி செய்தது?  என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், "ஜூலை மாதமே இந்த தவறான எஸ்எம்எஸ் பற்றி தகவல் தெரிந்தும் அரசாங்கம் ஏன் சட்டமன்ற உறுப்பினரை பாதுகாக்க முயற்சி செய்தது?  எஃப் ஐ ஆர் பதிவு செய்தோம், ஆனால் அது இணையதளத்தில் பதிவேற்றவில்லை. ஏனென்றால் அது கசிந்து விடும் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் தெரிந்தும் தவறு செய்த எம்எல்ஏவை அமைச்சர்கள் எல்லாம் பாதுகாத்துக் கொண்டிருந்தார்களா? 

ஜூலை மாதமே இந்த தவறான எஸ்எம்எஸ் பற்றி தகவல் தெரிந்தும் அரசாங்கம் ஏன் சட்டமன்ற உறுப்பினரை பாதுகாக்க முயற்சி செய்தது?

எஃப் ஐ ஆர் பதிவு செய்தோம் ஆனால் அது இணையதளத்தில் பதிவேற்றவில்லை ஏனென்றால் அது கசிந்து விடும் என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் தெரிந்தும் தவறு செய்த எம்எல்ஏ வை… pic.twitter.com/hiXaKZCggR

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) November 24, 2026


மாணிக்கம் தாகூர் ஏன் முதலமைச்சரும் பாதுகாத்துக் கொண்டு இருந்தாரா தவறு செய்தவர்களும் தண்டனைக்கு உரியவர்கள் தவறை மறைப்பவர்களும்  தண்டனைக்குரியவர்கள் பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது இது மன்னிக்க முடியாத குற்றம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.