☰
×

"திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டியே.."- தமிழிசை சௌந்தரராஜன்

 

போதை புழக்கம் குறித்து விமர்சனங்களை விடுத்து நடவடிக்கை வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "பல கோடி ரூபாய் மதிப்பிலான மெத் போதைப்பொருள் ராமநாதபுரத்தில் தயாரிக்கப்பட்டு இலங்கைக்குக் கடத்தப்படுகிறது, போதைப் பொருள் விவகாரத்தில் தான் தவெகவுக்கும்-திமுகவுக்கும் போட்டி. இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இவை ஒழிக்கப்பட வேண்டும். தவெகவும், திமுகவும் மாறி மாறி  குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்..இடையில் பாதிக்கப்படுவது மக்கள் தான்..விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள் முற்றிலும் ஒழிக்கப் படவேண்டும்..முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.