☰
×

"வக்கிர புத்தி... ஏன் Mood-ஐப் பற்றி பேசுகிறீர்கள்?”- உதயநிதியை கண்டித்த தமிழிசை

 

உதயநிதி பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.இரட்டை அர்த்தத்தில் பேசுவது தான் பிரச்சாரமா? என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன். இரட்டை அர்த்தத்தில் பேசுவதுதான் பிரச்சாரம் என்பதை திமுக மறுபடியும் மறுபடியும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்? நீங்கள் அரசியல், ஆட்சியின் Mode-ஐப் பற்றி பேசுங்கள். ஏன் Mood-ஐப் பற்றி பேசுகிறீர்கள்? மரியாதை இல்லாத தன்மையாக போய் கொண்டிருக்கிறது. மோசமான வக்கிர புத்தியாக போய் கொண்டிருக்கிறது. தவெக அரசு 717 மதுக்கடைகளை மூடிவிட்டோம் என்று சொல்லிவிட்டு, மதுக்கூடங்களைத் திறந்துகொண்டிருக்கிறது. பெண்களை பாதிக்கும் டாஸ்மாக்கை விரிவுப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.

SIR இல்லை என்றால் நீங்கள் அமைச்சராகி இருக்க முடியாது. விஜய் அவர்கள் முதலமைச்சராகி இருக்க முடியாது. கள்ள ஓட்டுகளை வைத்து திமுக மறுபடியும் வெற்றி பெற்றிருக்கும். SIR-க்கு தவெக அமைச்சர்கள் நீங்க நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.