தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அழுத்ததில் போட்டியிடுவதாக விமர்சக்கிறாங்க.. இது என்ன நியாயம்? தமிழிசை கேள்வி
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்துள்ள பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் புதிதாக பயிற்சி நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வருக புரிந்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் வழக்கறிஞர்கள் என்பவர்கள் எளிதில் எதையும் பேசி புரிந்து கொள்ளக்கூடிய தன்மை வேண்டும், அப்போதுதான் நாம் வாதாடி வெற்றி பெற முடியும். மேலும் இந்தியா ஒரு வலுப்பெற்ற நாடு எனவும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளின் போது கூட திறம்பட நமது பாரத பிரதமர் செயலாற்றி இந்தியாவை மீட்டெடுத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், இரு விஷயங்களுக்கு கடுமையான கண்டனங்கள் என்று துவங்கி எஸ்வி சேகர் பெண்களைப் பற்றி இழிவாக பேசியதற்கும், அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் பெண்களைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதற்காகவும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மேலும் இந்த திராவிட அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பெண்களுக்கு பாதுகாப்பும் தராமல் வாக்குறுதிகளை மட்டும் வாரி இறைத்து கொண்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு திமுக இதுவரை பதில் அளிக்கவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எப்பொழுதுமே திமுகவினர் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு என்றும் மேலும் அவர்கள் பெண்களை இழிவாக பேசுவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தவர்.
பாஜகவில் தாங்கள் எந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் என கேள்வி எழுப்பியதற்கு தலைமை எந்த தொகுதியை அறிவிக்கிறதோ அந்த தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாகவும், முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக எடப்பாடி நடத்திய துவங்கிய பிரச்சாரத்தில் தாம் நட்புடன் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தவர். அனைத்து தரப்பினருமே தாமரை மற்றும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தான் நமது கூட்டணியில் வந்திருக்கின்றனர். மேலும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அழுத்ததில் போட்டியிடுவதாக கருத்து கூறியுள்ளார். இது மிகவும் கண்டனம் தெரிவித்தார். அதாவது உதயசூரியனுக்கு சின்னத்தில் போட்டியிட்டால் விருப்பம், தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது அழுத்தமா? தாமரை நமது தேசிய மலர் அதை இழிவாக பேசிய கருணாஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.