தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன்- தமிழிசை
திருமாவளவனுக்கு சீமானும் சங்கி, விஜய்யும் சங்கி என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன், ஆண்டுக்கு ரூ.65 ஆயிரம் கோடி ரூபாயை மட்டும் தமிழ்நாடு அரசு வட்டியாக செலுத்துகிறது. பெண்களுக்கு மாதம் ரூ.1,000 கொடுத்துவிட்டு, ஒரு குடும்பம் மீது 5 லட்சம் ரூபாய் கடனை ஏற்றியுள்ளனர். எல்லா கட்சிகளிலும் வெல்லும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில், என்னுடைய படத்தோடு பதிவு போட்ட கனிமொழிக்கு நன்றி. திருமாவளவனுக்கு யாரை பார்த்தாலும் சங்கி தான். நாங்க நேரடி சங்கி, விஜய் மறைமுக சங்கி. திருமாவளவன் தான் திமுகவின் நிரந்தர அடிமையாக உள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்கள் அதிகமாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் . பெண்கள், அரசியல், சமூக வாழ்க்கையில் எல்லை கடந்து வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது கலாச்சார போர் நடக்கிறது. சமூகநீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்து ள்ளது. தமிழ்மொழி மற்றும் பண்பாட்டை கொண்டாடுவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. தமிழை கொண்டாடுவது பாஜக. ஆனால் தமிழை திண்டாட வைப்பது திமுக அரசு” என்றார்.