“பிரதமர் கூறியதில் தவறில்லை”- தமிழிசை செளந்தரராஜன்
பீகார் மக்களை திமுகவினர் கீழ்த்தரமாக நடத்துவதாக பிரதமர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் திமுகவால் துன்புறுத்தப்படுவதாகப் பேசியதற்கு அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் பீகார் மக்களை திமுகவினர் கீழ்த்தரமாக நடத்துவதாக பிரதமர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பீகாரிகள் அறிவில்லாதவர் என கே.என்.நேரு கூறினார், டேபிள் துடைக்க, பாத்ரூம் கழுவத்தான் சரியானவர்கள் என தயாநிதி கூறினார். திமுக மீது வைக்கப்படும் விமர்சனம் திமுக மீது மட்டும்தான், தமிழர்கள் மீது இல்லை என்பதை முதல்வருக்கு சொல்லிக் கொள்கிறேன். தமிழர்கள் மீது பிரதமர் மரியாதை வைத்திருப்பதால் தான் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தார்” என்றார்.