×

“திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்..”- பிரதமர் மோடி கண்டனம்!

 

திமுகவிற்கு துரோகம் செய்திருக்கிறது காங்கிரஸ் கட்சி என பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

பெங்களூருவில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலைச் சற்று உற்றுநோக்குங்கள். கடந்த இருபத்தைந்து முதல் முப்பது ஆண்டுகள் வரை, காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வந்தது. பல தருணங்களில், திமுகவுடனான இந்தக் கூட்டணியே காங்கிரஸைப் பல்வேறு நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுத்தது,சொல்லப்போனால், 2014-ஆம் ஆண்டிற்கு முந்தைய பத்தாண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நீடித்ததற்குக் கூட, பெருமளவில் திமுகவே காரணமாக அமைந்தது. ஆயினும், காங்கிரஸின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் தொடர்ந்து பாடுபட்டு வந்த அதே திமுக, அரசியல் சூழல் மாறிய கணமே நம்பிக்கைத் துரோகத்திற்கு ஆளாக்கப்பட்டது. அதிகார வேட்கையால் உந்தப்பட்டு, பதவி வெறி பிடித்த காங்கிரஸ் கட்சி, தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே திமுகவின் முதுகில் குத்தியது. இப்போது, ​​அரசியல் களத்தில் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள, தான் சவாரி செய்து செல்லக்கூடிய வேறொரு கட்சியின் துணை காங்கிரஸிற்கு மீண்டும் தேவைப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.