×

பாஜகவின் கொடி கம்பத்தை அகற்றிய வருவாய்த்துறை வட்டாச்சியர்! அதன்பின் நடந்த விபரீதம்

விருதுநகர் மாவட்டத்தில் பாஜகவின் கொடிக் கம்பத்தை வருவாய்த் துறை வட்டாட்சியர் அகற்றியதால் அப்பகுதியில் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த பாஜக கொடிக் கம்பத்தை மாவட்ட வருவாய்த் துறை வட்டாட்சியர் அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசு அதிகாரிகளின் இந்த செயலை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள முத்துராமலிங்க சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள் கட்சியின் கொடியை ஏற்றுவதற்காக கொடிக் கம்பத்தை
 

விருதுநகர் மாவட்டத்தில் பாஜகவின் கொடிக் கம்பத்தை வருவாய்த் துறை வட்டாட்சியர் அகற்றியதால் அப்பகுதியில் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த பாஜக கொடிக் கம்பத்தை மாவட்ட வருவாய்த் துறை வட்டாட்சியர் அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசு அதிகாரிகளின் இந்த செயலை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள முத்துராமலிங்க சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள் கட்சியின் கொடியை ஏற்றுவதற்காக கொடிக் கம்பத்தை நிறுவினர். தொடர்ந்து மாவட்ட கட்சி நிர்வாகிகள் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை பாஜக கொடியை ஏற்றினர்.

இந்நிலையில் கொடி கம்பத்தை அமைக்க பாஜகவினர் உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி, மாவட்ட வருவாய் வட்டாட்சியர் முத்துலட்சுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நிறுவப்பட்டிருந்த பாஜக கொடிக் கம்பத்தை மாநகராட்சி ஊழியர்களின் உதவியோடு அகற்றினார். இதனால் அதிருப்தியடைந்த பாஜகவினர், ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடிக் கம்பத்தை அதே இடத்தில் மீண்டும் அரசு நிறுவ வேண்டும் என்றும் கம்பத்தை அகற்றிய வருவாய்த் துறை வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.