×

கடம்பூர் ராஜூவை காக்க வைத்த கமலாலயம்

 

பியூஸ் கோயல் வந்த உடனேயே கடம்பூர் ராஜு அவரை சந்தித்து மனு அளித்துவிட்டு புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவினர் அவரை காக்க வைத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து தீப்பெட்டி தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மனு  அளிக்க இன்று காலை நயினார் நாகேந்திரனின் இல்லத்திற்கு சென்றார். ஆனால் பியூஸ் கோயல் நேரடியாக கமலாலயம் வருவதால் கமலாலயத்திற்கு நேரில் சென்று சந்திக்கலாம் என்று கூறி   நயினார் நாகேந்திரன் தனது காரின் முன் சீட்டில் கடம்பூர் ராஜுவை  அமர வைத்து கமலாலயம் அழைத்து வந்தார்.கடம்பூர் ராஜு வருகை தந்து 20 நிமிடங்களுக்கு பிறகு பியூஸ் கோயில் கமலாலயம் வந்தடைந்தார்

பியூஸ் கோயல் வந்த உடனேயே கடம்பூர் ராஜு அவரை சந்தித்து மனு அளித்துவிட்டு புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவினர் அவரை காக்க வைத்துள்ளனர். முதல் தளத்தில் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை நடைபெறும் நிலையில் கடம்பூர் ராஜூவை தரைத்தளத்தில் உள்ள அறை ஒன்றில் அமர வைத்துள்ளனர். பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நிறைவுற்ற பிறகே அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜூவை சந்திக்க முடியும் என பாஜகவினர் கூறியதால் கடம்பூர் ராஜூ காத்திருக்கிறார்.