மூப்பனார் பிரதமராக வருவதை தடுத்தனர் - நிர்மலா சீதாராமன்
த.மா.கா நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் நடைபெற்ற மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “உங்கள் அனைவரிடமும் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டணி நல்ல முறையில் நடத்த வேண்டும். இந்த கூட்டணி மூலமாக மக்களுக்கு செய்ய வேண்டிய தொண்டை ஆற்ற வேண்டும். சின்ன சின்ன உட்பூசல்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். மூப்பனார் பிரதமராக வருவதை தடுத்தனர். நல்லாட்சியை மக்கள் தேடிவருகின்றனர். தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். சிறிய சிறிய பூசல்களை பற்றி கவலைப்படாமல் செயல்பட வேண்டும். நேரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அதற்கு பதிலளிப்போம்” எனக் கூறினார்.