×

“ஆறுதல் கூறவே கரூர் வந்தோம், இதில் வேறு எதுவும் இல்லை”- நிர்மலா சீதாராமன்

 

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் டாக்டர். எல். முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பிரதமரே இங்கு வந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் பேச விரும்பினார். அவர் வர விருப்பப்பட்டாலும், வர முடியாத சூழலால் எங்களை அனுப்பி வைத்துள்ளார். என்னையும், அமைச்சர் எல்.முருகனையும் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். வேதனையை கூறி அழுபவர்களிடம் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. இங்கு நாங்கள் பார்த்தவற்றை, கேட்டவற்றை, பிரதமரிடம் தெரிவிப்போம். பாதிக்கப்பட்டவர்கள் கூறியதையும் பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தெரிவிப்பேன்.

கரூர் வந்து பார்த்ததும் உயிரிழந்தவங்களோட குடும்பத்தினர் சொல்றதை கேட்க்கும் போது அப்படியே எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரை பறிகொடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. இனி இதுபோல் ஒரு சம்பவம் நம் நாட்டில் நடைபெறக் கூடாது. இந்த விவகாரத்தில் நான் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. மாநில அரசு என்ன செய்கிறது, என்ன சொல்கிறது என்பதனை கண்காணிக்க நான் இங்கு வரவில்லை. இந்த மாதிரியான சம்பவம் நிகழும்போது பல விதமான கருத்துக்கள் வருவதும், கோபம் எழுவதும் இயல்புதான்” என்றார்.