×

“உதயநிதியின் இரட்டை அர்த்த பேச்சு அருவருப்பானது”- நாராயணன் திருப்பதி

 

தஞ்சையில் முதல்வர் விஜய் மற்றும் திரிஷா பற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் இரட்டை அர்த்த பேச்சு அருவருப்பானது மற்றும் வெட்கக்கேடானது என பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் @arivalayam திமுகவின் உதயநிதி ஸ்டாலினின் @Office_of_Udhay , முதலமைச்சர் விஜய் @TVKVijayHQ - திரிஷா @trishtrashers குறித்த இரட்டை அர்த்த பேச்சு அருவெறுக்கதக்கது, ஆபாசமானது , கேவலமானது, வெட்கக்கேடானது.

உண்மையிலேயே தாய், மனைவி, மகள் உள்ள ஒரு புறம்போக்கு-களவாணி கூட…

— Narayanan Thirupathy (@narayanantbjp) August 3, 2026


இதுதொடர்பாக பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் தளத்தில், “தஞ்சாவூரில்  திமுகவின் உதயநிதி ஸ்டாலினின் , முதலமைச்சர் விஜய்- திரிஷா குறித்த இரட்டை அர்த்த பேச்சு அருவெறுக்கதக்கது, ஆபாசமானது , கேவலமானது, வெட்கக்கேடானது. உண்மையிலேயே தாய், மனைவி, மகள் உள்ள ஒரு புறம்போக்கு-களவாணி கூட இப்படி கேவலமாக பேச மாட்டான். அப்படி பேசுபவர்களை எந்த தாயும், மனைவியும், மகளும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் ‘திராவிட மாடல்’ என்று சொல்லிக்கொண்டு கேடுகெட்ட ஜென்மங்கள் இப்படி பொதுவெளியில் பேசுவதை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. மார்க்கண்டேயனை கைது செய்ததை விட இந்த தரங்கெட்ட பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலினை கைது செய்து சிறையிலைடப்பது விஜய்க்கு பெருமை சேர்க்கும். நீதிமன்றங்கள் இந்த பேச்சுக்கு தண்டனை அளிக்குமா அல்லது பிணை வழங்குமா என்பதை பார்ப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.