☰
×

கைது செய்வது எந்த வகையில் நியாயம்? -  நயினார் நாகேந்திரன்

 

ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வது எந்த வகையில் நியாயம்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், "இன்றைய தினம், திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை தரிசிப்பதற்காகவும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படுவதைக் கண்ணாரக் காண்பதற்காகவும் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டுச் சென்றோம்.

ஆனால், இந்த ஜனநாயக நாட்டில், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, அதன்படி நடைபெறும் நிகழ்வைக் காணச் சென்ற எங்களை, இந்து மக்கள் விரோத தமிழக வெற்றிக் கழக அரசின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதும், மக்களின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாப்பதும் ஓர் அரசின் கடமை. ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வது எந்த வகையில் நியாயம்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.