×

“பேச்சை திரித்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்”- நயினார் நாகேந்திரன்

 

முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி…

— Nainar Nagenthran (@NainarBJP) August 15, 2026


இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு  பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார். அப்போது அவர், "சட்டசபைக்கு சென்று அப்பா எங்கே, அப்பா எங்கே என்று சிலர் தேடுகிறார்கள். வீட்டுக்கு சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று கூறுவார்கள். அதை விட்டுவிட்டு, சட்டசபைக்கு சென்று அப்பாவை தேடினால் யாருக்கு தெரியும்? இப்படிப்பட்டவர்களின் ஆட்சிதான் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது" என பேசினார். கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, முதலமைச்சர் விஜய் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிடும் வகையில், "அப்பாவை எங்கே காணோம்" என்று பேசியிருந்தார். தற்போது இந்த வார்த்தையை பயன்படுத்தி முதலமைச்சர் விஜய்யை நயினார் நாகேந்திரன் விமர்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.