"அரசியல் கட்சி தலைவர்களை திமுக அரசு ஒடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை"- நயினார் நாகேந்திரன்
Aug 13, 2025, 21:48 IST
பொதுமக்களின் நலனுக்காகப் போராடும் அரசியல் கட்சி தலைவர்களை திமுக அரசு ஒடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “திமுக-வின் தேர்தல் வாக்குறுதி எண் 285-ன் படி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் கடந்த 12 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை இன்று மாலை சந்திக்கவிருந்த தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான சகோதரி தமிழிசை அவர்களை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற திமுக அரசின் அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொதுமக்களின் நலனுக்காகப் போராடும் அரசியல் கட்சி தலைவர்களை திமுக அரசு ஒடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை!