×

நவீன் மரணத்திலும் காவல்துறையினரின் கை ஓங்கி இருக்குமோ என சந்தேகம்”- நயினார் நாகேந்திரன்

 

சில தினங்களுக்கு முன்பு காவலர்களால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட திரு. அஜித்குமார் வழக்கு போன்று திரு. நவீன் மரணத்திலும் காவல்துறையினரின் கை ஓங்கி இருக்குமோ என்ற பலத்த சந்தேகம் மக்கள் மனதில் எழுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “திருமலா பால் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கொளத்தூர் துணை ஆணையர் திரு. பாண்டியராஜன் அவர்களால் சட்டவிரோதமாக விசாரிக்கப்பட்டு வந்த திருமலா நிறுவனத்தின் மேலாளர் திரு. நவீன் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் அதிர்ச்சி செய்திகள், நம்பும்படியாக இல்லை. சில தினங்களுக்கு முன்பு காவலர்களால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட திரு. அஜித்குமார் வழக்கு போன்று திரு. நவீன் மரணத்திலும் காவல்துறையினரின் கை ஓங்கி இருக்குமோ என்ற பலத்த சந்தேகம் மக்கள் மனதில் எழுகிறது.