×

குப்பை அள்ளுபவர்களுக்குக் குப்பை வண்டியில் சோறு... வட்டியும் முதலுமாய்... நயினார் நாகேந்திரன் கண்டனம்

 

குப்பை அள்ளுபவர்களுக்குக் குப்பை வண்டியில் சோறு போட்டால் போதும் என்று நினைக்கிறீர்களா முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “கோவை காந்திபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்குக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் குப்பை வண்டியில் காலை உணவு அனுப்பி வைத்த திமுக அரசின் ஆணவம் அருவருக்கத்தக்கது. துளியும் மனிதாபிமானமற்ற இச்செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வுலகில் மனிதனாகப் பிறந்த எவருக்கும் இப்படியொரு அவமானம் நேரக் கூடாது. இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன், கழிவறையில் கூட காசு பார்த்து கொள்ளையடிக்கும் உங்கள் திமுக தலைவர்களை ராஜமரியாதையுடன் நடத்தும் உங்கள் அரசுக்கு, நமது நாட்டைச் சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவளிப்பதில் என்ன சிக்கல்? எங்களுக்கு உணவளியுங்கள் என்று தூய்மைப் பணியாளர்கள் உங்களைக் கேட்டார்களா? எதற்காக “சோறு போடுகிறோம்” என்ற போர்வையில் அவர்களின் சுயமரியாதையை இப்படி சீண்டிப் பார்க்கிறீர்கள்?