×

உங்களுடன் ஸ்டாலின் நாடக முகாமிற்காக அரசுப் பள்ளி விடுமுறை- நயினார் நாகேந்திரன் கண்டனம்

 

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதற்காகத் திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரி முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் அரங்கேறும் உங்களுடன் ஸ்டாலின் நாடகம்! உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதற்காகத் திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரி முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மாதம் இதே நாடக முகாமிற்காகத் திருச்சி அரசுப்பள்ளிக்கு விடுமுறை அளித்த நிலையில், தொடர்ந்து அரசுப்பள்ளி வகுப்பறைகளைத் திமுக அரசு பறிப்பது தொடர்கதையாகி வருகிறது.