×

தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி நகைக்காக கொலை- நயினார் நாகேந்திரன் கண்டனம்

 

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நகைக்காக கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நகைக்காக கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொங்குப் பகுதிகளில் இதுவரை நடந்த அனைத்து கொலை, கொள்ளைகளுக்கும் காரணமானவர்களைக் கண்டு பிடித்து கைது செய்துவிட்டோம் என திமுக அரசு ஒருபுறம் மார்தட்டிக் கொண்டிருக்க, அதே பகுதியில் அதே பாணியில் மீண்டுமொரு கொலை அரங்கேறியுள்ளது, மக்களை குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.