×

“தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு வாரத்திற்குள் நல்ல செய்தி வரும்”- நயினார் நாகேந்திரன்

 

பிரதமர் பங்கேற்பது பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அது மாநாடாகவே நடந்து முடிந்துள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “பிரதமர் பங்கேற்பது பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அது மாநாடாகவே நடந்து முடிந்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் மனசாட்சி படி கூற வேண்டும். தேர்தல் அறிக்கையில் திமுகவினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக கூறினார்கள். கூறியதை இந்த ஐந்து ஆண்டுகளில் செய்தார்களா?. இதுவரை செய்யவில்லை. பேச்சுவார்த்தையின் போது ஜூன் மாதம் தருவதாக கூறியிருக்கிறார்கள். இவர்களின் ஆட்சி காலமே முடிந்து விட்டது. இவர்கள் எப்படி ஜூன் மாதம் தர முடியும். கடுமையான விமர்சனங்களை முன்வைத்த டிடிவி தினகரன் தற்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளாரே இதேபோன்று மற்றவர்கள் வர வாய்ப்பு இருக்கிறதா? இதற்கு முன் உதாரணமாக கலைஞரை எடுத்துக் கொள்ளலாம். அவர் பேசும்போதெல்லாம் கூறுவார் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.

அதிமுக நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவோடு கூட்டணியில் இல்லை. அடிமையாக இருந்திருந்தால் அப்போதும் கூட்டணி சேர்ந்து இருப்பார்களே. திமுகவினர் தான் காங்கிரஸ் போன்றவர்களை சேர்த்து வைத்து அடிமையாக வைத்திருக்கிறார்கள். வைரமுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பொய் கவிதை. அதே கருத்தை ரஜினிகாந்த் பேசியிருந்தால் நான் பதில் கூறி இருப்பேன். திமுக போன்ற எதிர்கட்சிகள் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் இவையெல்லாம் ஒரு தனி அமைப்புகள். அதில் ஏதாவது குறைகள் இருந்தால் அவர்களிடம் தான் கேட்க வேண்டுமே தவிர பாஜகவிடம் கேட்கக்கூடாது. நடிகர் விஜய் தற்போது தான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை.2 எம் எல் ஏ கூட இல்லை. எத்தனை பேர் தேர்தலில் போட்டியிடப் போகிறார்கள் என்பதே தெரியாது. அவர் போட்டி போடட்டும் அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. பாஜக யாருக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

நிச்சயமாக உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். தேமுதிக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் அணி எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் பதில் கிடைக்கும். பாரதிய ஜனதாவில் ஊழல் இல்லை. தீய சக்தி இல்லை ஆகையால் பாஜகவை பற்றி விஜய் பேசியிருக்க மாட்டார். திமுகவை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என ஒற்றை எண்ணத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒரு குடைக்குள் வரவேண்டும் என்பதை எனது விருப்பம். டிடிவி தினகரன் எங்கள் கூட்டணிக்கு வந்துள்ளார். அடுத்த செய்திகள் உங்களுக்கு காத்திருக்கிறது.300 மடங்கு தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.தேமுதிக எங்களோடு கூட்டணி அமைப்பது குறித்து தற்பொழுது நான் கருத்து கூற முடியாது” என்று கூறினார்.